இ ந்தியாவிலுள்ள வீடுகள் மற்றும் கோவில்களில், கிட்டத்தட்ட 50,000 டன் தங்கம் முடங்கி கிடப்பதாகவும், இதன் மதிப்பு 10 டிரில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 940 லட்சம் கோடி ரூபாய் என என்.எஸ்.இ., அதிகாரி ஸ்ரீராம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில், “தங்கத்தை வெறும் நகைகளாக பீரோவில் பூட்டி வைப்பது நாட்டுக்கு எந்த பயனும் தராது. அதை நிதி பத்திரங்களாக மாற்றினால், தங்க இறக்குமதி குறையும்; தங்கம் இறக்குமதி செய்ய இந்தியா செலவிடும் அன்னிய செலாவணி மிச்சமாகும்; நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வரும். முடங்கி கிடக்கும் தங்கம் நிதி சுழற்சிக்கு வரும்போது, அது நாட்டின் ஜி.டி.பி., வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்கும்,” என முன்னாள் மத்திய அமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
