துளிகள்

தரகு கட்டணத்தை உயர்த்தியது ‘ஜீரோதா’

கு றிப்பிட்ட வகை வர்த்தகர்களுக்கு ஒரு ஆர்டருக்கான தரகு கட்டணம் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தப்படும் என, தரகு நிறுவனமான ‘ஜீரோதா’ தெரிவித்துள்ளது.

செபி விதிகளின்படி, முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தில், தங்களின் வர்த்தக கணக்கில் 50 சதவீதத்தை ரொக்கமாக அல்லது அதற்கு இணையான பங்கு உள்ளிட்டவற்றை பிணையாக பராமரிக்காத வர்த்தகர்களுக்கு மட்டுமே இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வாடிக்கையாளர்களின் கணக்கில் ரொக்கம் குறையும்போது, தனது சொந்த நிதியை கொண்டு ஈடுசெய்து வந்ததாக அந்நிறுவனம் கூறியுள்ளது. எனவே, புதிய கட்டுப்பாடுகளால் இனி அவ்வாறு செய்ய முடியாது என்பதால், இந்த கட்டண உயர்வு ஏப்., 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

‘கிரெட்’ செயலியில் புதிய வசதி

நி தி தொழில்நுட்ப சேவை வழங்கும் ‘கிரெட்’ செயலியில் இனி, 5,000 ரூபாய் வரையிலான யு.பி.ஐ., பரிவர்த்தனைகளை செய்ய ‘பின்’ நம்பருக்கு பதிலாக முகம் அல்லது கைரேகை பதிவை அங்கீகரிக்கும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ கார்ப்பரேஷனுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, பின் நம்பர் மற்றவர்களுக்கு தெரிவதை தவிர்க்கவும், தவறான எண்களை பதிவு செய்வதை குறைக்கவும் உதவும். கிரெடிட் கார்டு பில், மின்கட்டணம் மற்றும் கடைகளில் பணம் செலுத்துவது என அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும்.

Source link