தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்வு 

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 13,250 ரூபாய்க்கும், சவரன் 1,06,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 350 ரூபாய் உயர்ந்து, 13,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,800 ரூபாய் அதிகரித்து, 1,08,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது.

கிலோவுக்கு 10,000 ரூபாய் அதிகரித்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Source link