சட்டப்பேரவை தேர்தல்- வெளியான அதிகாரப்பூர்வ பாஜக வேட்பாளர் பட்டியல்

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்று மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் புதுவை சட்டப்பேரவை தேர்தலில் பத்து இடங்களில் பஜக போட்டியிடும் நிலையில் 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. மண்ணடிபட்டு தொகுதியில் நமச்சிவாயம் போட்டியிட உள்ளார். முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார், மணவவெளி தொகுதியில் ஏம்பளம் ஆர்.செல்வம், திருநள்ளாறு தொகுதியில் ராஜசேகரன், ஊசுடு தொகுதியில் தீப்பாய்ந்தான், காலாபேட் தொகுதியில் கல்யாணசுந்தரம், ராஜ்பவன் தொகுதியில் ராமலிங்கம், நிரவி தொகுதியில் மீனாட்சி சுந்தரம், மாஹே தொகுதியில் தினேஷ்ன் என மொத்தம் 9 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது. 

Source link