சென்னை: அ.தி.மு.க., கூட்ட ணியில், புரட்சி பாரதம் கட்சிக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் உள்ள, புரட்சி பாரதம் கட்சி, இரண்டு தொகுதிகளை கேட்டது.
அக்கட்சிக்கு, கே.வி.குப்பம் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, அவர் கூறுகையில், “புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியை அறிவித்துள்ளனர். நாங்கள் எதிர்பார்த்தது ஒன்று; நடந்தது வேறு.
”அதனால், கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தை இன்று கூட்டி, அதன் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” இவ்வாறு அவர் கூறினார்.
