“நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் பழனிசாமிக்கும் வரும்”

எதிர்காலத்தில் பிஹாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை, மகாராஷ்டிராவில் சிவ சேனா, சரத் பவார் கட்சிகள், கோவாவில் மாநிலக் கட்சிகள் சந்தித்த நிலைதான் பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் ஏற்படப்போகிறது.

இப்படிப்பட்டச் சூழலில் அதிமுக தொண்டர்களின் சுய மரியாதையை காப்பதுதான் திராவிடக் கட்சி என்று சொல்லும் அக்கட்சி எடுக்கும் சரியான நடவடிக்கையாக இருக்கும். இபிஎஸ் என்னதான் மேக் அப் போட்டு மறைத்தாலும் அவருடைய ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் அமித் ஷா தான் இருக்கிறார் என்பது கிராமங்கள் வரைக்கும் தெரியும். அதிமுக என்பதை அடிமை திமுக என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார் என்பதுதான் கட்சியினரே சொல்வதாக உள்ளது. அமித் ஷா கொடுக்கும் ஸ்க்ரிப்ட்டை மாற்றிவிடாமல் அப்படியே பழனிசாமி வாசிக்கிறார்.

மோடியா – லேடியா? என்று பாஜகவுக்கு சவால்விட்டவர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு மோடி தான் எல்லாமே என்று சொல்லி மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் அளவுக்கு பழனிசாமி நடந்து கொள்கிறார்.

இந்த நேரத்தில் ‘டெல்லிக்கு தமிழ்நாடு அவுட் ஆஃப் கன் ட்ரோல்’ என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் திமுக தலைவர் தலைமையில் தமிழக மக்கள் ஒன்றுதிரண்டு கொண்டிருக்கிறார்கள். திமுக 2.o மீண்டும் மலரக் கூடிய சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, எத்தனை முறை வேண்டுமானாலும் பேசி மனநிறைவோடு கூட்டணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின, தொகுதி ஒப்பந்தங்களும் சுமுகமாக நடைபெறுகிறது.

என்டிஏ கூட்டணி அமித் ஷா வாயசைவுக்கு ஏற்ப இயங்குகிறது, திமுக கூட்டணி சுயமரியாதையுடன் இயங்குகிறது, இந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

Source link