மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- மோப்பநாயுடன் தீவிர சோதனை

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள துறை வாரியான அறைகள், பயன்பாடற்ற பொருட்கள் வைக்கும் அறை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் இல்லாத நிலையில், இமெயில் மூலமாக அனுப்பப்பட்ட தகவல் புரளி என தெரியவந்தது.

இந்த அதிரடி சோதனை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link