தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவர்

நமது நிருபர்

காரைக்குடியில் தந்தை இறந்த சோகத்திலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை தர்ஷன் என்ற மாணவன் எழுதி சம்பவம் கண்கலங்க வைத்தது.

காரைக்குடி எஸ்எம்எஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர் தர்ஷன் 17. இவரது தந்தை செல்வகுமார் (55) கல்லீரல் பாதிப்பால் கடந்த 6 மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். தந்தையின் உடல் வீட்டில் இருக்கிறது.

இன்று மாலை 3 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது. ஆனாலும் சிறப்பு தமிழ் தேர்வெழுத மாணவர் தர்ஷன் பள்ளிக்கு வந்தார். அவருக்கு ஆசிரியர்கள் சக மாணவர்கள் ஆறுதல் கூறினர். தந்தை இறந்த சோகத்திலும், தர்ஷன் தேர்வு எழுதிய சம்பவம் கண் கலங்க வைத்தது. உயிரிழந்த செல்வகுமார் தச்சு வேலை செய்து வந்துள்ளார்.

Source link