தலைமறைவான எம்எல்ஏ ஆறு மாதங்களுக்குப் பின் கைது; பஞ்சாப் காவல்துறை அதிரடி

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பகவந்த் மான் முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அக்கட்சியைச் சேர்ந்த ஹர்மித் சிங் பதன்மஜ்ரா, சனவுர் தொகுதியின் எம்எல்ஏ வாக இருந்து வருகிறார். இவர் மீது காவல்நிலையத்தில் ஒரு பெண் பாலியல் புகார் அளித்திருந்தார். அதாவது, ஜிரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் குற்றம் மற்றும் பணமோசடி குறித்த புகாரின் அடிப்படையில் ஹர்மத் மீது பாலியல் குற்றம் மற்றும் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்தப் புகாரில், ஹர்மித் தன்னை விவாகரத்து பெற்றவர் என்று தவறாகக் கூறி, தன்னுடன் உறவில் ஈடுபட்டதாகவும், அவர் ஏற்கனவே திருமணமானவராக இருந்தபோதிலும் 2021-ல் தன்னை திருமணம் செய்துகொண்டதாகவும் அப்பெண் குறிப்பிட்டிருந்தார். அதோடு, அவர் தன்னிடம் தொடர்ந்து பணம் பறித்து வந்தார் எனவும் தெரிவித்திருந்தார். 

இதன் காரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹரியானாவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த இருந்த போது, ஹர்மித்தை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது, அவரது ஆதரவாளர்கள் கற்கள் வீசி காவல்துறையினரைத் தாக்கியுள்ளனர். அந்த சமயத்தில் அவர் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பினார். இதையடுத்து, அவர் தலைமறைவாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஹர்மித்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், அவரை கைது செய்யவும் உத்தரவிட்டது.  

இதையடுத்து, கடந்த ஆறு மாதங்களாகத் தேடப்பட்டுவந்த  ஹர்மத், மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்து. இந்த தகவலைத் தொடர்ந்து, அவரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்தனர். 

Source link