அடுத்த சென்சேஷன் ரெடியா? – ‘யூத்’ விமர்சனம்!

அசுரன் படம் மூலம் சிறந்த நடிகராகப் பிரபலமாகி, பின் தனுஷின் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இளம் நடிகரும், நடிகர் கருணாஸின் மகனுமான “கென் கருணாஸ்” தனுஷிடம் உதவி இயக்குநராக சில படங்களில் பணிபுரிந்தார். இவர் தற்பொழுது யூத் படம் மூலம் நாயகனாகவும், அதேசமயம் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த சிறிய வயதிலேயே, இவ்வளவு பெரிய பொறுப்பைக் கையில் எடுத்திருக்கும் கென் கருணாசுக்கு இந்த படம் கை கொடுத்ததா, இல்லையா?

டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் கென் கருணாஸ், தன் பள்ளியில் படிக்கும் சக தோழிகளான மூன்று பேருடன் காதல் வயப்படுகிறார். ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் காதலிக்கப்படுகின்றனர். இதனால், இவரது குடும்பத்தில், நட்பில், படிப்பில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. தொடர்ந்து, பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கும் கென் கருணாஸ் கடைசியில் தன் குடும்பம், காதல், படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதை இப்படத்தின் மீதி கதை.

தன் வயதிற்கு ஏற்ப வழக்கமான பள்ளிப் பருவ காதலைக் கையில் எடுத்திருக்கும் நடிகரும், இயக்குநருமான கென் கருணாஸ் வழக்கத்திற்கு மாறாகச் சிறப்பான முறையில் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, குறிப்பாக மேக்கிங் கை சிறப்பான முறையில் அமைத்துப் படத்தைக் கரைசேர்த்து வெற்றி பெறச் செய்திருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல், இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அதேசமயம் அழுத்தம் நிறைந்த சென்டிமென்ட் காட்சிகளோடு அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் படியும் கொடுத்து தியேட்டரில் கைதட்டல்கள் மற்றும் விசில்களைப் பெற்று பாராட்டுகளைப் பெற்று இருக்கிறார். படத்தில் சில இடங்களில் மட்டும் ஆங்காங்கே வேகத்தடைகள் தென்பட்டாலும், அவை பெரும்பாலும் படத்திற்கு எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்தாமல் மற்ற அனைத்து காட்சிகளும் கலகலப்பான முறையில் அமைந்து படத்தைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து இருப்பது கூடுதல் சிறப்பு. எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு எமோஷன்ஸ் தேவையோ அதைச் சிறப்பான முறையில் சரியான கலவையில் அதேசமயம் இந்த கால ஜென்சிகளும் ரசிக்கும்படி அமைத்துக் கொடுத்து, இந்த காலகட்டத்தின்  அடுத்த சென்சேஷனாக மாறி இருக்கிறார் கென் கருணாஸ். இந்த சிறிய வயதிலேயே தான் எடுத்துக்கொண்ட இவ்வளவு பெரிய பணியைச் சிறப்பான முறையில் செய்து காட்டி, தன் குருமார்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். 

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் கென் கருணாஸ் துரு துரு வென படம் முழுவதும் வந்து எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காதவாறு கலகலப்பான நடிப்பைச் சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார். இவரது நடிப்பில் பல்வேறு ஸ்டைல் நடிகர்கள் சாயல் தெரிந்தாலும் அவை ரசிக்கும்படி அமைந்திருப்பது அவருக்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இந்த கால டீன் ஏஜ் பருவ இளைஞரை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். இவருடன் நடித்த மூன்று கதாநாயகிகள் பிரியான்ஷி, அனிஷ்மா, மீனாட்சி தினேஷ் ஆகியோர் அவரவருக்கான போர்ஷனில் சிறப்பான முறையில் நடித்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். மூன்று பேருமே தனக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து படத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். குறிப்பாக இவர்களுக்கும் நாயகனுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் ஆகி இருக்கிறது. அதேபோல் நாயகனுக்கு நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும், சிறப்பான முறையில் நடித்து படம் முழுவதும் கலகலப்பாக நகர்வதற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

இவர்களின் எதார்த்தமான கலகலப்பான நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. இவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. குறிப்பாக பப்லு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மிகச்சிறப்பு. நாயகனின் அப்பாவாக வரும் சுராஜ் வெஞ்சர மூடு ஆரம்பத்தில் வழக்கமான அப்பாவாக வந்து இறுதிக் கட்டத்தில் கலகலப்பாகவும் கலங்கடிக்கும் படியான நடிப்பையும் சிறப்பான முறையில் கொடுத்து நம்மைக் கலங்கடித்து இருக்கிறார். நடிகை தேவதர்ஷினி வழக்கம்போல் அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்து மிளிர்கிறார். இவருக்கும் சுராஜ்க்குமான கெமிஸ்ட்ரி சிறப்பான முறையில் ஒர்க் அவுட் ஆகி படத்துடன் நம்மை ஒன்ற வைத்து இருக்கிறது. ஒரு மிடில் கிளாஸ் தாய், தந்தையாகச் சிறப்பாக நடித்து அவர்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். மற்றபடி சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நளினி உட்படப் பலர் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்து படத்திற்குப் பக்கபலமாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கின்றனர். 

ஜி.வி பிரகாஷ் இசையில் முட்டக் கலக்கிப் பாடல் சிறப்பு. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். ஒரு கலகலப்பான படத்திற்கு எந்த மாதிரியான இசை தேவையோ அதைச் சிறப்பான முறையில் கொடுத்துப் படத்தைக் கரை சேர்க்க உதவி இருக்கிறார். இவரது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. விக்கி ஒளிப்பதிவில் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு, அதேசமயம் காதல் காட்சிகளும் நேர்த்தியாகப் படம் பிடிக்கப்பட்டு, நம்மைப் படத்துடன் ஒன்ற வைத்து இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒருவித காமெடி பாதையில் பயணித்து முழுவதுமான ஜனரஞ்சக படமாக மாறிப் போகப் போக இறுதிக்கட்டத்தில் வழக்கம்போல் கலங்கடிக்கும்படியான சென்டிமென்ட் காட்சிகளோடு முடிந்து, சிறப்பான என்டர்டைன்மென்ட் படமாக இந்த யூத் படம் அமைந்ததுடன்  நல்லபடியாகக் கரை சேர்ந்திருக்கிறது. கதையாக நாம் ஏற்கனவே பார்த்துப் பழக்கப்பட்ட பள்ளிப் பருவ காதல் கதையாகவே இருந்தாலும், அதைக் காட்டிய விதமும் படத்தின் மேக்கிங் அதில் நடித்த கதை மாந்தர்களின் கலகலப்பும் சிறப்பான முறையில் அமைந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிக்கும்படியான படமாக அமைந்த இந்த யூத் திரைப்படம் வெற்றிப் படமாக மாறி இருக்கிறது.

யூத் – அடுத்த சென்சேஷன்!  

Source link