தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு புறம் ஆந்திர துணை முதல்வராக இருந்துகொண்டு மறுபுறம் படங்களிலும் நடித்து வருகிறார்.
அண்மையில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘உஸ்தாத் பகத் சிங்‘ கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திரைப்படங்களில் நடிப்பதைத் தடை செய்யக் கோரிய மனுவை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
