“கென் மட்டும்தான் அந்த விஷயத்தை நேர்மறையாகப் பார்த்தாரு! – ‘யூத்’ பப்ளூ |”Ken was the only one who viewed that matter positively!” — ‘Youth’ Pablu

தொடர்ந்து பேசிய அவர், “சிவகார்த்திகேயன் சார் மூலமாகத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். அவர்தான் என்னை முதல் முதலில் ‘டான்’ படத்துல நடிக்க வச்சாரு. நான் முதல்ல எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் ஆபீஸ்ல ஆபீஸ் பாயாகத்தான் வேலை பார்த்துட்டு இருந்தேன்.

என்னைப் பத்தி அங்க இருக்கிறவங்க எஸ்.கே. சார்கிட்டச் சொல்லியிருக்காங்க. அப்படி ஒரு நாள் ஆபீஸ்ல சுத்திட்டு இருக்கும்போது, எஸ்.கே. சார் சிபி சக்ரவர்த்தி சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினாரு.

நான் ஒரு கேரக்டருக்குச் சரியாக இருப்பேன்னு சொல்லி என்னை நடிக்க வச்சாங்க. ‘கனா’ படத்துல தமிழரசன் பச்சமுத்து அண்ணா உதவி இயக்குநராக வேலை பார்த்திருந்தார்.

பிறகு அவர் என்னைப் பத்திக் கேள்விப்பட்டு ‘லப்பர் பந்து’ படத்துல என்னை நடிக்க வச்சாரு. நடிப்புன்னு ஆசையோட சினிமாவுக்கு வரல. ஆனா, ‘டான்’ல நடிச்சதுக்குப் பிறகு எனக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்துடுச்சு. ‘டான்’ படம் முடிச்சப் பிறகே வாய்ப்புகள் தேட ஆரம்பிச்சுட்டேன்.

எஸ்.கே. புரொடக்ஷன்ல இப்போ நான் வேலைல இல்லைன்னாலும், நான் அந்த ஆபீஸ்லதான் தங்கியிருக்கேன். சாப்பாடு, வீடுன்னு வெளியே போனா நிறைய செலவாகும்னு என்னை அங்கேயே தங்கச் சொல்லிட்டாங்க.

இப்போவும் அங்கதான் தங்கியிருக்கேன். அங்க இருந்துதான் இப்போ இந்தப் பேட்டிக்கும் வந்திருக்கேன். வரும்போதுகூட, எஸ்.கே. சார் ‘யூத்’ படத்துக்கு வாழ்த்துச் சொல்லி, ‘இனிமேல் உனக்கு நல்ல கேரக்டர்ஸ் வரும்’னு சொல்லி வாழ்த்தினாரு” என்றவரிடம் அவர் எஸ்.கே. புரொடக்ஷனுக்குள் எப்படி வந்தாரெனக் கேட்டோம்.

Source link