த.மா.கா வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு: இன்று காலை 11.30 மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களை தலைவர் ஜி.கே. வாசன் அறிவிக்கிறார். தே.ஜ கூட்டணியில் கிள்ளியூர், ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் த.மா.காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தேர்தல் அறிக்கை வெளியீடு: தைலாபுரத்தில் தேர்தல் அறிக்கையை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிடுகிறார். சசிகலாவுடன் கூட்டணி வைத்துள்ள ராமதாஸ் இன்று காலை 10.30 மணிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
தி.மு.க கூட்டணி கட்சி: தி.மு.க கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ, ம.ஜ.க, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா ஒரு தொகுதிக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.
-
Mar 26, 2026 14:53 IST
தமிழகத்தில் இதுவரை ரூ.189 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் – அர்ச்சனா பட்நாயக் தகவல்
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணமாக மட்டும் ரூ.4.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
Mar 26, 2026 14:48 IST
த.மா.கா வேட்பாளர்கள் அறிவிப்பு நாளை வெளியாகும் – ஜி.கே. வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு நாளை (மார்ச் 27) வெளியாகிறது. தேர்தல் அறிக்கையும் நாளை வெளியிடப்படுகிறது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
-
Mar 26, 2026 14:34 IST
“கட்சிக்காக உழைத்தவர்களை அம்போ என விட்டுவிட்டார் கமல்ஹாசன்” – வானதி சீனிவாசன் விமர்சனம்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “தான் மட்டும் ராஜ்யசபா சீட் வாங்கிக்கொண்டு, கட்சிக்காக உழைத்தவர்களை அம்போ என விட்டுவிட்டார் கமல்ஹாசன்” என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
Mar 26, 2026 13:45 IST
அ.தி.மு.க கூட்டணியில் இணைந்த புதிய கட்சி; ஒரு தொகுதி ஒதுக்கீடு
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் சி.த.மு.க. தலைவர் பரதன் பேட்டி: “அ.தி.மு.க கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் ஒரு தொகுதியைக் கேட்டுள்ளோம். சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்” என்று கூறினார்.
-
Mar 26, 2026 13:42 IST
தி.மு.க வெற்றிக்கு அ.தி.மு.க உதவுகிறது – சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க – அ.தி.மு.க இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. அமைச்சர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதியை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கினால் தி.மு.க வெற்றி எளிது” என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
Mar 26, 2026 13:27 IST
2024-ல் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட வழக்கு: நயினார் நாகேந்திரனை இ.டி விசாரிக்கக் கோரி தி.மு.க மனு
2024 மக்களவைத் தேர்தலில் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை இ.டி விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தி.மு.க முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கில் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். குற்றம் சாட்டப்பட்டோர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என்பதால் இ.டி நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் கூறப்பப்ப்ட்டுள்ளது.
-
Mar 26, 2026 13:12 IST
மோசடி கட்சி தி.மு.க… நிறைவேற்றாத பழைய தேர்தல் அறிக்கையே வெளியிடலாம் – அன்புமணி காட்டம்
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்தத் தேர்தலுக்கு தி.மு.க புதிதாக தேர்தல் அறிக்கை வெளியிடத் தேவையில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக தி.மு.க வெளியிட்டு விடலாம். 100% வாக்குறுதிகள் நிறைவேற்றம் எனக் கூறுவதன் மூலம் தி.மு.க மோசடி கட்சி என்பது நிரூபணம் ஆகியுள்ளது” என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
-
Mar 26, 2026 12:58 IST
எடப்பாடி பழனிசாமியுடன் ஜான்பாண்டியன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து பேசினார். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மறுபுறம் என்.டி.ஏ கூட்டணியில் ஏ.சி.சண்முகத்திற்கு தொகுதி ஒதுக்கப்படாத நிலையில், அவரும் இ.பி.எஸ்-யை சந்தித்து ஆலோசனை நடத்தினார்
-
Mar 26, 2026 12:28 IST
ஏப்ரல் 2-ம் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் 2 ஆம் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கி 21ல் கொளத்தூரில் நிறைவு செய்கிறார். ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்
-
Mar 26, 2026 12:16 IST
நாளை த.வெ.க வேட்பாளர்கள் அறிமுகம்
த.வெ.க.,வின் 234 வேட்பாளர்களையும் நாளை (மார்ச் 27) அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
Mar 26, 2026 12:02 IST
சென்னைக்கு தி.மு.க செய்தது என்ன? இ.பி.எஸ்-க்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
தி.மு.க ஆட்சியில்தான் வடசென்னை வளர்ச்சித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது; முதல்வர் படைப்பகங்கள், அறிவுசார் மையங்கள், விளையாட்டு பயிற்சி மையங்கள், முதலமைச்சர் சமுதாய மண்டபங்கள் என கணக்கில் அடங்காத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய பரப்புரையில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்
-
Mar 26, 2026 11:50 IST
பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் – நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும், பா.ஜ.க தேர்தல் அறிக்கை 2 நாட்களில் வெளியாகும் என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்
-
Mar 26, 2026 11:35 IST
மிக்ஸி, கிரைண்டர் இல்லை தண்ணீர்தான் முக்கியம் – சீமான்
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 400 டி.எம்.சி தண்ணீர் வந்த நிலையில், தற்போது 150 டி.எம்.சி.,யாக குறைக்கப்பட்டுள்ளது, நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தண்ணீருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நா.த.க ஆட்சிக்கு வந்தால் மிக்ஸி, கிரைண்டர் போன்ற இலவசங்களை வழங்க மாட்டோம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
-
Mar 26, 2026 11:17 IST
ம.தி.மு.க வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு
ம.தி.மு.க.,வில் நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் நடைபெறும் என்றும் நாளை 3.30 மணிக்கு மேல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Mar 26, 2026 11:06 IST
டெல்லி சென்று வந்து அறிவிக்கிறார் இ.பி.எஸ் – அமைச்சர் சிவசங்கர்
வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள பா.ஜ.க.,வுக்கு அதிக இடங்களை கொடுத்துள்ளார், இ.பி.எஸ் ஒவ்வொரு முறையும் டெல்லி சென்று வந்து தொகுதிகளை அறிவிக்கிறார். வி.சி.க.,வை, இ.பி.எஸ் குறைகூறுவது வியப்பாக உள்ளது, தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்து யாருக்கும், எவ்வித மனப்கசப்பும் இல்லை, தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்
-
Mar 26, 2026 11:04 IST
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – வி.சி.க வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க கூட்டணியில் உழவர்கரை தொகுதி வி.சி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் பெற மறுத்ததால், வி.சி.க.,வும் போட்டியிடுகிறது. ஊசுடு – அரியபுத்ரி, நெட்டப்பாக்கம் – அமுதவன், உழவர்கரை – புஷ்பலதா ஆகியோர் வி.சி.க சார்பில் போட்டியிடுவதாக தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
Mar 26, 2026 10:44 IST
வேல்முருகன் கூறுவது அபாண்ட குற்றச்சாட்டு – சிவசங்கர்
துரைமுருகனால் முதல்வரை சந்திக்க முடியவில்லை என வேல்முருகன் கூறுவது அபாண்ட குற்றச்சாட்டு என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தேர்தலில் வேல்முருகன் கேட்ட இடங்களைத் தரவில்லை எனில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? என விமர்சித்துள்ளார்.
-
Mar 26, 2026 10:20 IST
நாளை மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – வைகோ அறிவிப்பு
ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு தாயகத்தில் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார்.
-
Mar 26, 2026 10:18 IST
கொமதேகவிற்கான 2 தொகுதிகள் எவை?
தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்ற தகவல் இன்று வெளியாகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகள் குறித்த தகவல் வெளியானது. திருச்செங்கோடு, பொள்ளாச்சி தொகுதிகளை கொமதேகவிற்கு ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Mar 26, 2026 10:16 IST
அதிமுக நிர்வாகி காரில் இருந்து மொய்க் கவர்கள் பறிமுதல்
திருநெல்வேலியில் ராமையன்பட்டி அருகே அ.தி.மு.க நிர்வாகி செந்தில் குமாரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில், அ.தி.மு.க தலைவர்கள் படங்கள் அடங்கிய மொய்க் கவர்கள் பறிமுதல் செய்தனர்.
-
Mar 26, 2026 10:13 IST
தி.மலையில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்
பா.ம.க வேட்பாளர் பட்டியலுடன் திருவண்ணாமலை கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தார்.
-
Mar 26, 2026 09:43 IST
களைகட்டும் பிரச்சார வாகனங்கள்!
தமிழகத்தில் 2026 மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், திருச்சியில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்காக பிரச்சார வாகனங்களை நவீன வசதிகளுடன் வடிவமைக்கும் பணிகள் தீவிரமடைந்தன. அதிநவீன ஒலிபெருக்கிகள், மின் விளக்குகள் மற்றும் மேற்கூரை மாற்றங்கள் செய்யும் பட்டறைகளில் முன்பதிவுகள் குவிந்து வருவதால், வாகன உதிரிபாக விற்பனையும் திருச்சியில் அமோகமாக நடக்கிறது.
-
Mar 26, 2026 09:41 IST
மதுரவாயலில் ரூ.1.13 கோடி பறிமுதல்
சென்னையை அடுத்த மதுரவாயலில் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது. இந்தப் பணம் 31 டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்த தொகை மற்றும் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பணம் எனத் தெரியவந்தது. பணத்தை உரிய ஆவணங்களை செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
-
Mar 26, 2026 09:29 IST
பா.ஜ.க விரும்பிய தொகுதியை கொடுக்காத அ.தி.மு.க
கோவை வடக்கு தொகுதியை மட்டும் பா.ஜ.கவிற்கு அ.தி.மு.க ஒதுக்கியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், அங்கு வானதி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மற்றும் பல்லடம் தொகுதிகளில் போட்டியிட அண்ணாமலை விரும்பியதாக பேசப்படும் நிலையில், அவற்றை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்காததால் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Mar 26, 2026 09:19 IST
ஒரே நாளில் 5 தொகுதிகளில் விஜய் பிரசாரம்
சட்டமன்ற தேர்தல் – நாளை மறுநாள் பெரம்பூர் எம்.கே.பி நகர் பகுதியில் இருந்து காலை 10 மணிக்கு பிரசாரத்தை தவெக தலைவர் விஜய் தொடங்குகிறார். கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் தொகுதிகளிலும் நாளை மறுநாள் ஒரே நாளில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.
-
Mar 26, 2026 09:18 IST
அதிருப்தியில் அண்ணாமலை?
அ.தி.மு.க – பா.ஜ.க தொகுதி பங்கீடு விவகாரத்தால் அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையத்தில் போட்டியிட அண்ணாமலை விரும்பியதாக சொல்லப்படும் நிலையில், அவற்றை பாஜகவுக்கு அதிமுக தரப்பு ஒதுக்க முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
-
Mar 26, 2026 08:57 IST
புதுச்சேரியில் 366 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்பட்ட 514 வேட்புமனுக்களில் 366 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.புதுச்சேரில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் இன்று காலை 11 முதல் பிற்பகல் 3 வரை திரும்பப் பெறலாம்.
-
Mar 26, 2026 08:32 IST
ஒரே நாளில் 5 தொகுதிகள்
நாளை மறுநாள் (மார்ச் 28) ஒரே நாளில் 5 சட்டமன்ற தொகுதிகளில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுமதி கோரி அளிக்கப்பட்ட கடிதத்தில், ஒவ்வொரு பகுதியிலும் 3 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Mar 26, 2026 08:06 IST
அ.தி.மு.கவின் அடுத்த பட்டியல் வெளியீடு
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.கவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே 23 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடுவோர் விவரங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
-
Mar 26, 2026 07:33 IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 3.20 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பிறகு இதுவரை சுமார் 3.20 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் ஆணைய விதிகளின்படி வேட்புமனு தாக்கல் இறுதி நாளுக்கு 10 நாட்கள் முன்பு பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
-
Mar 26, 2026 07:31 IST
புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை ஒதுக்கிய அ.தி.மு.க
மூன்று தொகுதிகளை நம்பியிருந்த புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை அதிமுக கொடுத்துள்ளதால் அதிருப்தியில் உள்ள ஜெகன் மூர்த்தி, நாளை கட்சியின் நிர்வாகக் குழுவை கூட்டியுள்ளார். கூட்டணியில் நீடிக்கலாமா? அல்லது வெளியேறுவதா? என கூட்டத்தில் கருத்து கேட்டு முடிவு செய்ய உள்ளார்.
-
Mar 26, 2026 07:30 IST
தி.மு.க கூட்டணி கட்சி
தி.மு.க கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ, ம.ஜ.க, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா ஒரு தொகுதிக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.
-
Mar 26, 2026 07:30 IST
தேர்தல் அறிக்கை வெளியீடு
தைலாபுரத்தில் தேர்தல் அறிக்கையை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிடுகிறார். சசிகலாவுடன் கூட்டணி வைத்துள்ள ராமதாஸ் இன்று காலை 10.30 மணிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
-
Mar 26, 2026 07:29 IST
த.மா.கா வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
இன்று காலை 11.30 மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களை தலைவர் ஜி.கே. வாசன் அறிவிக்கிறார். தே.ஜ கூட்டணியில் கிள்ளியூர், ஒட்டன்சத்திரம், கும்பகோணம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் த.மா.காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
