நமது நிருபர்
ஏப்ரல் 2ம் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கி 21ல் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் நிறைவு செய்கிறார். அவர் ஏப்ரல் 6ல் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28, தேமுதிக – 10, விசிக – 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 5, மதிமுக – 4, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி – 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 2, மனிதநேய மக்கள் கட்சி – 2, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கூட்டணி கட்சி மற்றும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஏப்ரல் 2ம் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கி 21ல் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் நிறைவு செய்கிறார். அதன் விபரம் பின்வருமாறு:
* திருவாரூர் (ஏப்ரல் 2ம் தேதி).
* ஜெயங்கொண்டம், திருவெறும்பூர் (ஏப்ரல் 3ம் தேதி)
* கரூர், திருப்பூர் (ஏப்ரல் 4ம் தேதி)
* நாகர்கோவில், திருநெல்வேலி (ஏப்ரல் 5ம் தேதி)
* திருவள்ளூர் (ஏப்ரல் 6ம் தேதி)
* மேட்டுப்பாளையம், சூலூர் (ஏப்ரல் 7ம் தேதி)
* பரமத்தி வேலூர், ஈரோடு (ஏப்ரல் 8ம் தேதி)
* தருமபுரி, கிருஷ்ணகிரி (ஏப்ரல் 9ம் தேதி)
* வேலூர், ஆரணி (ஏப்ரல் 10ம் தேதி)
* சிவகங்கை, மதுரை (ஏப்ரல் 11ம் தேதி)
* விருதுநகர், சங்கரன் கோவில் (ஏப்ரல் 12ம் தேதி)
* தஞ்சாவூர், மயிலாடுதுறை (ஏப்ரல் 13ம் தேதி)
* நெய்வேலி, விழுப்புரம் (ஏப்ரல் 14ம் தேதி)
* அணைக்கட்டு, ராணிப்பேட்டை ( ஏப்ரல் 15ம் தேதி)
* கள்ளக்குறிச்சி, சேலம் (ஏப்ரல் 16ம் தேதி)
* ஆண்டிபட்டி, திண்டுக்கல் (ஏப்ரல் 17ம் தேதி)
* ராமநாதபுரம், விளாத்தி குளம் (ஏப்ரல் 18ம் தேதி)
* செங்கல்பட்டு (ஏப்ரல் 19ம் தேதி)
* பெரம்பலூர் (ஏப்ரல் 20ம் தேதி)
* ஸ்ரீபெரும்புதூர், கொளத்தூர் (ஏப்ரல் 21ம் தேதி)
இதற்கிடையே ஏப்ரல் 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதேபோல் துணை முதல்வர் உதயநிதியும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இந்த வார இறுதியில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
