கொல்கத்தா: பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவரின் தாய் பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டி | RG kar – Kolkata: Mother of Medical Intern Raped and Murdered Contests Election as BJP Candidate

இந்த அறிவிப்பை விமரிசித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, “தனது மகளின் மரணம் குறித்து சிபிஐ சரியாக விசாரணை நடத்தவில்லை என்று அவர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். அப்படி இருக்கையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவையே அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிரதமர், உள்துறை அமைச்சர் அல்லது ஜனாதிபதியை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.

இவ்வளவு அலட்சியத்திற்குப் பிறகும் அவர் பாஜகவில் இணைந்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

2024, ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சந்தீப் ராய் என்ற ஒப்பந்த ஊழியரால் பயிற்சி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

சந்தீப் ராய் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்திற்கு பிறகு மமதா பானர்ஜி அரசுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

தற்போது பாதிக்கப்பட்ட மாணவியின் தாயே தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link