ஆந்திராவில் பஸ்சில் தீப்பற்றியது; பயணிகள் 10 பேர் உயிரிழந்த சோகம்

அமராவதி: ஆந்திராவில் டிப்பர் லாரி மீது தனியார் சொகுசு பஸ் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்க்கபுரம் மண்டலத்தின் ராயவரம் அருகே இன்று அதிகாலை தனியார் சொகுசு பஸ் ஒன்று கற்கள் ஏற்றிச் சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பிறகு மோதிய வேகத்தில் பஸ்சும், லாரியும் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். இந்த சம்பவத்தில் 10 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

Source link