பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சுமார் 7 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு மதியம் 12:30 மணியளவில் விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள நிறுவனம், அவர்களை லண்டன் கொண்டு செல்ல மாற்று விமானம் அல்லது தங்கும் வசதிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக உறுதியளித்துள்ளது.
கடந்த வாரமும் டெல்லியில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்குப் புறப்பட்ட விமானம், 9 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு மீண்டும் டெல்லிக்கே திரும்பியது.
