ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது. அதனால் உலகநாடுகளில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியும் `நாம் இன்னொரு லாக்டவுன் சூழலுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என அறிவுறுத்தியிருந்தார். அதனால், இந்தியாவிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில், பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், “மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் எனப் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல. அடுத்த 60 நாள்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை முன்கூட்டியே செய்துள்ளதால், விநியோகச் சங்கிலியில் எந்தவித இடைவெளியும் ஏற்பட வாய்ப்பில்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கல்கள் இருந்தாலும், இந்தியா 40-க்கும் மேற்பட்ட உலகளாவிய விநியோகஸ்தர்களிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வருகிறது.
