புதுடில்லி: இந்தியாவில் நயாரா என்ற தனியார் நிறுவனம் பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 3 ரூபாயும்

புதுடில்லி: இந்தியாவில் நயாரா என்ற தனியார் நிறுவனம் பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 3 ரூபாயும் உயர்த்தி உள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரலுக்கு 119 அமெரிக்க டாலரை எட்டி உள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் மட்டும் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக நயாரா நிறுவனம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.

மேற்காசியா போர் துவங்கிய பிறகு இந்தியாவில் விலையை உயர்த்தும் முதல் நிறுவனம் இதுவாகும்.

இந்த நிறுவனத்துக்கு நாடு முழுதும் 6,967 பெட்ரோல் பம்புகள் உள்ளன. பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது.சில இடங்களில் வாட் வரியுடன் சேர்த்து பெட்ரோல் விலை 5.30 ரூபாய் உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 107.93 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 97.22 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Source link