பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “இந்த வழக்கு தந்தை – மகனுக்கு இடையே உள்ள பிரச்சினை. மாம்பழம் சின்னத்தை தற்போதைய நிலையில் முடக்க முடியாது. தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது. புதுவையில் சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது” என்று வாதிப்பட்டது.
