நியூயார்க் : கடந்தாண்டு, கத்தோலிக்க கிறிஸ்துவ மதத் தலைவர் போப் ஆகும் தகுதி தனக்கு தான் உண்டு என்று கூறிய

நியூயார்க் : கடந்தாண்டு, கத்தோலிக்க கிறிஸ்துவ மதத் தலைவர் போப் ஆகும் தகுதி தனக்கு தான் உண்டு என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது, ஈரான் நாட்டின் ஆட்சியாளர் பதவி தன்னைத் தேடி வந்ததாகக் கூறியுள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்., 28ல் தாக்குதல் தொடுத்தன. இந்த தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி புதிய ஆட்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வாஷிங்டனில் நடந்த குடியரசு கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், “ஈரான் தலைவர்கள் பலர் என்னிடம், உங்களை அடுத்த ஆட்சியாளராக்க விரும்புகிறோம் என்று கூறினர். அதற்கு நான் இல்லை, நன்றி என்று மறுத்துவிட்டேன்,” என்று கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில், போப் பிரான்சிஸ் மறைந்தபோது, அடுத்த போப் ஆக விரும்புகிறேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். மேலும் அவர், தான் போப் உடை அணிந்த புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கி பகிர்ந்திருந்தார். அதன்பின், பல போர்களை நிறுத்தியதாகக் கூறி, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது அந்த வரிசையில், ஈரானின் உச்ச தலைவர் பதவி தன்னைத் தேடி வந்ததாக அவர் கூறியிருப்பதற்கு, சமூக வலைதளங்களில் பலரும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

Source link