சென்னை: சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் நேற்று, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்

சென்னை: சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் நேற்று, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேசினர். காங்கிரஸ், தே.மு.தி.க., கட்சிகளால் இழுபறி நீடிக்கிறது.

தி.மு.க., கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழர் தேசம் கட்சிக்கு தலா ஒரு தொகுதி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வகையில் ஒதுக்கப்பட்டது.காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுவால் வழங்கப்பட்ட, 40 தொகுதிகளில், ‘தென்காசி, ஊட்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு பதிலாக, கடையநல்லுார், வாசுதேவநல்லுார் வாங்கிக் கொள்ளுங்கள்’ என, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க., தொகுதி பங்கீடு குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம், தே.மு.தி.க., தரப்பில், 10 தொகுதிகளுக்கான பட்டியல் வழங்கப்பட்டது. அதில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியும், ரிஷிவந்தியம் தொகுதியும் கேட்டு, தே.மு.தி.க., அடம் பிடித்து வருகின்றனர். அந்த இரண்டு தொகுதிகளையும் விட்டுக் கொடுக்க முடியாது என, தி.மு.க., குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஏமாற்றம் அடைந்துள்ளார். நாளை காலை 10:00 மணிக்கு காங்கிரஸ், தே.மு.தி.க., தொகுதிகள் அடையாளம் காணும் பணி முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க.,வில் இணைந்த அ.ம.மு.க., நிர்வாகி

அ.ம.மு.க., துணை பொதுச்செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ரங்கசாமி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். இவர், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுக்கு நெருக்கமாகவும், தஞ்சாவூர் மாவட்ட அ.தி.மு.க.,வில் செல்வாக்குடனும் இருந்தவர்.

செய்தியாளர்களிடம் ரங்கசாமி கூறுகையில், ”மாநில சுயாட்சி பேணி காக்க, தி.மு.க.,வில் இணைந்தேன். மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரும். அ.தி.மு.க.,விடம் இருந்து அ.ம.மு.க.,வால் அதிக தொகுதிகளை பெற முடியவில்லை. அ.தி.மு.க., – அ.ம.மு.க., பொருந்தா கூட்டணி,” என்றார்.

Source link