அபுதாபியில் ஈரான் ஏவுகணை தாக்குதல்.. இந்தியர் உட்பட இருவர் பலி | Iran war

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தபோதும் ஏவுகணையின் பாகங்கள் அபுதாபியின் ஸ்வீஹான் சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் இந்தியர் ஒருவரும், பாகிஸ்தானியர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எமிராட்டி, ஜோர்டான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link