அதுமட்டுமல்லாமல் பாஜக மேலிடம் `ஜதி மதி பேட்டி’ என்ற பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இது அசாம் மாநிலத்தில், பெரும்பாலும் சட்டவிரோதக் குடியேற்றத்தை எதிர்த்துப் போராடும் சூழலில், அங்குள்ள பூர்வீக மக்களின் கலாச்சார அடையாளம், நில உரிமைகள் மற்றும் தங்கள் வீடுகளின் மீதான நியாயமான உடைமை ஆகியவற்றைப் பாதுகாப்பதை வலியுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஓர் அரசியல் முழக்கமாகும். அந்த முழக்கத்தை முன்னெடுத்து வாக்கு வேட்டையாடி வருகிறது பாஜக.
அதேநேரத்தில், அசாமுக்கு புதிய தலைமை வேண்டும். அசாம் முழுவதுமே பாஜகவுக்கு எதிரான அலை காணப்படுவதாக தனது பிரச்சாரத்தில் கூறி வருகிறார் கவுரவ் கோகோய். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதேநேரத்தில் அவருக்குப் போட்டியாக களத்தில் இறங்கி கடும் சவால் அளித்து வருகிறார் கவுரவ் கோகோய்.
