வாஷிங்டன்: ஈரான் விடுத்த வேண்டுகோளின்படி எரிசக்தி, மின்சார கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நிறுத்தம் மேலும் 10

வாஷிங்டன்: ஈரான் விடுத்த வேண்டுகோளின்படி எரிசக்தி, மின்சார கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நிறுத்தம் மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்., 28ல் துவங்கிய போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடன் அமைதி பேச்சுக்கு ஐந்து நாட்கள் கெடு விதித்திருந்தார்; அது இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கனவே ஈரானுடனான பேச்சுவார்த்தை காரணமாக, அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான ராணுவத் தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். தற்போது மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நிறுத்தம் மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரான் அரசின் கோரிக்கையின் பேரில், எரிசக்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை 10 நாட்களுக்கு, ஏப்ரல் 6ம் தேதி வரை, நான் ஒத்திவைத்துள்ளேன் . பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும், போலிச் செய்தி மற்றும் பிற தரப்பினரால் இதற்கு மாறாகத் தெரிவிக்கப்படும் தவறான கூற்றுகள் எவ்வாறிருப்பினும், அதற்கு மாறாக பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாகவே நடக்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Source link