தி.மு.க கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு: காங்கிரஸ், தே.மு.தி.க, வி.சி.க உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார். உதயசூரியன் சின்னத்தில் 175 வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகள் சின்னத்தில் 59 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றன.
381 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்: சென்னை அசோக் நகரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.77 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.77 கோடி மதிப்புள்ள 381 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்து நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
-
Mar 27, 2026 07:24 IST
381 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்
சென்னை அசோக் நகரில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.77 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.77 கோடி மதிப்புள்ள 381 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்து நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
-
Mar 27, 2026 07:22 IST
தி.மு.க கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு
காங்கிரஸ், தே.மு.தி.க, வி.சி.க உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார். உதயசூரியன் சின்னத்தில் 175 வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகள் சின்னத்தில் 59 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றன.
-
Mar 27, 2026 07:22 IST
மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
போர்ச்சூழல் பாதிப்பு தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். எரிபொருள் இருப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
