அபுதாபி: அபுதாபியில் ஈரான் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்த போது, அதில் இருந்து சிதறிய பாகங்கள் மோதி

அபுதாபி: அபுதாபியில் ஈரான் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்த போது, அதில் இருந்து சிதறிய பாகங்கள் மோதி இந்தியர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவின் ராணுவ தளங்களை அழிக்கும் விதமாக, யுஏஇ, சவுதி அரேபியா, ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில், யுஓஇ தலைநகர் அபுதாபியின் மீது ஈரான் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியது. அப்போது, அதனை யுஓஇ ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வந்தது. அப்படி, ஏவுகணை ஒன்றை இடைமறித்து அழித்த போது, அதில் இருந்து வெளியேறிய சிதறல்கள் சுவீஹான் சாலையில் விழுந்தது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். மேலும்,ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த இருவர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஏவுகணை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டது. அதில் இருந்து வெளியேறிய சிதறல்கள் விழுந்ததில், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இது குறித்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்காசிய போர் துவங்கியதில் இருந்து இதுவரையில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link