புதுடில்லி: பாப்கார்ன் தேவை அதிகரிக்கும் அதே வேகத்தில், அதற்கான மக்காச்சோளம் உற்பத்தியில் நம் நாடு, இறக்குமதியை தவிர்த்து தன்னிறைவு பெறும் பாதையில் முன்னேறி வருவதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.ஏ.ஆர்., தெரிவிக்கிறது.
இதுகுறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் பொது இயக்குநர் ஜாட் தெரிவித்ததாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்திய சந்தையில் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட பாப்கார்ன் ஆதிக்கம் செலுத்தியது.
உள்ளூர் உற்பத்தி மிகக்குறைவாக இருந்தது. தற்போது நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாப்கார்னுக்கான மக்காசோளம் தேவையில், உள்நாட்டு உற்பத்தி சுமார் 70 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இதனால் இறக்குமதி மீதான சார்பு கணிசமாக குறைந்துள்ளது.
எனவே, வரும் 2030ம் ஆண்டுக்குள் முற்றிலும் இறக்குமதியை தவிர்த்து தன்னிறைவு நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இந்திய சூழலுக்கு ஏற்ற உயர்தர பாப்கார்ன் மக்காச்சோளம் வகைகள் உருவாக்கப்பட்டதையும், ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து செயல்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட உற்பத்தி அமைப்பு உருவாகியதையும் கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
* கடந்த 2021 பிப்ரவரியில் ஐ.சி.ஏ.ஆர்., உருவாக்கிய எல்.பி.சி.எச்.,3 எனப்படும் உள்நாட்டு ஹைபிரிட் ரகத்தால் பாப்கார்ன் மக்காச்சோள உற்பத்தி வேகம் பிடித்தது.
* கார்மெட் பாப்கார்ஜிகா நிறுவனம் இந்திய மற்றும் அமெரிக்க பாப்கார்ன் பண்புகளை இணைத்து புதிய ஹைப்ரிட் வகைகளை உருவாக்கியது.
* 9 மாநிலங்களில் 17,500 விவசாயிகளுடன் இணைந்து 36,000 ஏக்கருக்கு மேல், பாப்கார்ன் மக்காச்சோளத்தை இந்நிறுவனம் பயிரிடுகிறது.
* ஒப்பந்த விவசாயம், தொழில்நுட்ப ஆதரவு, சிறந்த பேக்கேஜிங், சந்தைப்படுத்தல் ஆகியவற்றால் விவசாயிகளுக்கு நிலையான, அதிக வருமானம்
