கும்மிடிப்பூண்டி:
சென்னை அரும்பாக்கத்தில் இருந்து கல்லூரி மாணவர்களான 8 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 10 பேர் ஒரே காரில் இன்று காலை ஆந்திர மாநிலம் தடா நீர்வீழ்ச்சிக்கு புறப்பட்டனர். காரை மாணவர் ராஜமூர்த்தி (21) ஓட்டிச்சென்றார். அந்த கார், கவரைப்பேட்டை அருகே தச்சூரில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
