புதுச்சேரி தேர்தலுக்கு 45 கம்பெனி மத்திய துணை ராணுவம் வருகை | Puducherry Election

புதுச்சேரி:

புதுவை சீனியர் எஸ்பி கலைவாணன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறோம். கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தி வருகிறோம். 24 மணி நேரமும் செயல்படும் சோதனைச் சாவடிகள் புதுச்சேரியில் 19, காரைக்காலில் 10, ஏனத்தில் 10, மாகி பிராந்தியத்தில் 7 இடங்களில் அமைத்துள்ளோம்.

மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 3 பறக்கும் படைகள் தொகுதி முழுவதும் சுற்றி வருகின்றன. இதைத் தவிர வருமான வரித்துறை உள்ளிட்ட 24 அமலாக்க முகமைகள் வாயிலாகவும் விமான நிலையம், ரெயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்து வருகிறோம்.

Source link