இதில் நெட்டப்பாக்கம் வேட்பாளர் அமுதவன் கட்சியின் ஏ,பி. படிவம் தரவில்லை. இதனால் அவரின் மனு சுயேட்சையாக ஏற்கப்பட்டது.
ஊசுடு வேட்பாளர் அரிபுத்திரி, உழவர்கரை வேட்பாளர் புஷ்பலதா ஆகியோர் மனுக்கள் கட்சி சார்பில் ஏற்கப்பட்டாலும், அவர்களுக்கு பானை சின்னம் ஒதுக்கப்படாது என தெரியவந்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரியில் பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பவில்லை.
இதனால் அவர்களுக்கு சுயேச்சை சின்னங்கள்தான் வழங்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேருக்கும் வாளி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
