தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு; இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 25) ஆபரண தங்கம் கிராம், 13,600 ரூபாய்க்கும், சவரன், 1,08,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (மார்ச் 26) காலை தங்கம் விலை கிராமுக்கு, ரூ.70 உயர்ந்து, 13,670 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 1,09,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மாலை, தங்கம் விலை கிராமுக்கு, 320 ரூபாய் குறைந்து, 13,350 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,560 ரூபாய் சரிவடைந்து, 1,06,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (மார்ச் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 245 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source link