கன்னியாகுமரி: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருநெல்வேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நகேந்திரன் இந்த முறை வரும் தேர்தலில் சாத்தூரில் போட்டியிடுகிறார்.
இது குறித்து கன்னியாகுமரியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயமாக தேஜ கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். நான் சாத்தூரில் போட்டியிடுகிறேன், என்றார்.
மேலும் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் இருக்கும் நிலையில் மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளது. அதேபோன்று தமிழக அரசும் தங்களுடைய பங்கிற்கு குறைக்க வேண்டும். அதிமுக-பாஜ தொகுதி பங்கீட்டில் பரஸ்பரமான உடன்பாடுபடியே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அதிமுக அதிக இடங்களில் போட்டிருக்கிறது.
தலைமை முடிவு
பாஜவும் சில இடங்களில் அதிகப்படியான இடங்களில் போட்டியிடுகிறது. எனவே இது குறித்து வரும் அவதூறு பிரசாரங்களை மக்கள் நம்ப தேவையில்லை.
தொகுதி பரிமாற்றத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பாஜ கேட்டு வாங்கியது என்று கூறுவதற்கு ஏதுமில்லை. எல்லாமே தேசிய ஜனநாயக கூட்டணி தான், யார் ஜெயித்தாலும் முதல்வர் இபிஎஸ் தான். அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.
நடவடிக்கை
முதல்வர் ஸ்டாலின் மக்கள் பிரச்னைகளை கருத்தில் கொள்ளவில்லை. தங்களது குடும்ப பிரச்னையை தான் கருத்தில் கொண்டார். பாலியல் குற்றம் இல்லாத தமிழகம், கஞ்சா போதை இல்லாத தமிழகம் வேண்டும். ஆட்சி மாற்றம் ஒன்றே எங்கள் கொள்கை. திமுகவை சேர்ந்தவர்கள் பெண்கள் குறித்து இழிவாக பேசுவது இது ஒன்றும் முதல் முறை இல்லை, எனவே நடிகர் விஜய் கொடுத்த புகார் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
