நேபாள நாட்டின் பிரதமராக 35 வயது பாலேந்திர ஷா பதவியேற்பு! | Nepal – 35-Year-Old Balendra Shah Sworn in as Prime Minister of Nepal!

நேபாள நாட்டின் 47வது பிரதமராக 35 வயதேயான பாலேந்திர ஷா இன்று (மார்ச் 27) பதவியேற்றார்.

கடந்த ஆண்டு ஜென் இசட் போராட்டத்தால் சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷீலா கார்கி நீடித்து வந்தார்.

இந்த சூழலில் புதிய அரசை தேர்தெடுத்தப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி மொத்தம் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை விட 49,614 வாக்குகள் அதிகம் பெற்று அவரைத் தோற்கடித்தார்.

Source link