ராமர் நெற்றியில் பட்டு ஒளிர்ந்த சூரிய திலகம்; அயோத்தியில் ராம நவமி அற்புதம்

நமது நிருபர்

ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று 27ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக துவங்கியது. அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்தின் போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வந்தனர். கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.

ஜன்ம ஆரத்தி மற்றும் சூரிய திலகம் சூரியனின் கதிர்கள் ராம்லாலாவின் நெற்றியில் ஒளிரும் அற்புத காட்சி நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் ராம்லல்லாவின் தரிசனம் கண்டு பரவசமடைந்தனர்.

ஸ்ரீ ராமர் ஜன்மோத்சவ் கொண்டாட்டம் அயோத்தி நகரம் முழுவதும் பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Source link