“ஊரடங்கு (லாக்டவுன்) பற்றிய வதந்திகள் முற்றிலும் தவறானவை”- பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி | “Rumours about a lockdown are completely false,” said Petroleum Minister Hardeep Singh Puri.

ஈரான்-அமெரிக்கா- இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விநியோகத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதன்காரணமாக பல நாடுகள் எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதனிடையே கோவிட் காலத்தில் விதிக்கப்பட்ட லாக்டவுன் இந்தியாவில் மீண்டும் விதிக்கப்படலாம் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

கேஸ் சிலிண்டர்

கேஸ் சிலிண்டர்

இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.

“மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக, நாட்டில் ஊரடங்கு (லாக்டவுன்) பற்றிய வதந்திகள் முற்றிலும் தவறானவை.

இதை நான் தெளிவாகக் கூறுகிறேன். அத்தகைய முன்மொழிவு எதுவும் பரிசீலனையில் இல்லை.

Source link