தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான 2ஆம் கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (27.03.2026) வெளியிட்டுள்ளார். அதன்படி, இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் விழுப்புரம் மற்றும் சேலம் மண்டலங்களுக்கான முக்கிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, விழுப்புரம் தொகுதியில் திருமதி விஜயா மற்றும் திருக்கோவிலூர் தொகுதியில் எஸ். பழனிசாமி ஆகியோர் களம் காண்கின்றனர்.
உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் இரா. குமரகுரு மற்றும் சங்கராபுரம் தொகுதியில் ஆர். ராகேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் எஸ். ராஜீவ்காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கங்கவல்லி (தனி) தொகுதியில் ஏ. நல்லதம்பி, ஆத்தூர் (தனி) தொகுதியில் ஏ.பி. ஜெயசங்கரன் மற்றும் ஓமலூர் தொகுதியில் இரா. மணி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்காடு (பழங்குடியினர்) தொகுதியில் உஷாராணி மற்றும் மேட்டூர் தொகுதியில் ஜி. வெங்கடாஜலம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சங்ககிரி தொகுதியில் எஸ். வெற்றிவேல், சேலம் (தெற்கு) தொகுதியில் ஜே. வினோத் மற்றும் வீரபாண்டி தொகுதியில் ஸ்ரீ பாலாஜி சுகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை, சேந்தமங்கலம் (ST) தொகுதியில் முன்னாள் சி. சந்திரசேகரன், நாமக்கல் தொகுதியில் ஸ்ரீதேவி மோகன் மற்றும் பரமத்தி வேலூர் தொகுதியில் எஸ். சேகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். திருச்செங்கோடு தொகுதியில் ஆர். சந்திரசேகர் மற்றும் ஈரோடு (கிழக்கு) தொகுதியில் ஆர். மனோகரன் ஆகியோர் களம் காண்கின்றனர். தாராபுரம் (தனி) தொகுதியில் பி. சத்தியபாமா மற்றும் காங்கயம் தொகுதியில் என்.எஸ்.என். நடராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பெருந்துறை தொகுதியில் ஜே.கே. (எ) எஸ். ஜெயக்குமார் மற்றும் அந்தியூர் தொகுதியில் பி. ஹரிபாஸ்கர் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் வி.பி. பிரபு மற்றும் பவானிசாகர் (தனி) தொகுதியில் ஏ. பண்ணாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, கூடலூர் (தனி) தொகுதியில் பொன். ஜெயசீலன் எம்.எல்.ஏ மற்றும் குன்னூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஏ. ராமு ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில், மேட்டுப்பாளையம் தொகுதியில் ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ, திருப்பூர் (வடக்கு) தொகுதியில் எம்.எஸ்.எம். ஆனந்தன், பல்லடம் தொகுதியில் கே.பி. பரமசிவம், சூலூர் தொகுதியில் வி.பி. கந்தசாமி மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதியில் பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
