சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. இதில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய இரு பெண்கள் காயமடைந்தனர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (50). இவர் சென்னை வெடிபொருள் கட்டுப்பாட்டு உரிமம் பெற்று சிவகாசி அருகே விஸ்வநத்தம் – சித்துராஜபுரம் சாலையில் காமராஜர் நகரில் நடேஷ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை 3.50 மணி அளவில் பட்டாசுக்கு மருந்து செலுத்தும்போது வெடி விபத்து ஏற்பட்டது.
