உலகில் மாசுபாடு என்பது மக்களின் எதிர்காலம் மற்றும் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் வகையில் இருந்து வருகிறது. குறிப்பாக, கற்று மாசு என்பது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகளில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில், காற்று மாசு காரணமாக ஏராளமானோர் உடல்நல பதிப்பிற்குள்ளாகி இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஐ.கு ஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஐ.கு ஏர் நிறுவனம் வருடந்தோறும் காற்று தர அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டிற்கான பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் படி உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கதேசம் இரண்டாம் இடத்திலும், தஜிகிஸ்தான் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
உலக அளவில் 143 நாடுகளில் 13 நாடுகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தின் காற்று தர விதிகளைப் பூர்த்தி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, புவி வெப்ப மயமாதலால் உலகம் பல்வேறு விதமான நெருக்கடிகளைச் சந்திக்க இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காற்று மாசும் பெரும் அச்சுறுத்தலாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை வாகனப்புகை மற்றும் தொழிற்சாலை கழிவுகள் போன்றவை காற்று மாசிற்கு முக்கிய காரணிகளாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
