அமெரிக்க அதிபர் மாளிகையில், சர்வதேச ரோபோ மாநாடு நேற்று நடந்தது.
இதில், 45 நாடுக ளைச் சேர்ந்த தலைவர்களின் மனைவியர் பங்கேற்றனர். மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலேனியா பங்கேற்றார். அவருடன், ‘ பிகர் 3’ என்ற மனித வடிவ ரோபோ பங்கேற்றது. இந்த ரோபோ, பெங்காலி உட்பட, 11 மொழிகளில் விருந்தினர்களை வரவேற்றது.
