ஈரான் கடற்படை தளபதி பலி March 27, 2026 Dinamalar உலகம் 0 ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதை மேற்பார்வையிடும் பணிகளை கவனித்து வந்த ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட் சிகர காவல் படையின் கடற்படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தவர் அலிரேசா டங்சிரி, 64. நேற்று அதிகாலை ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுக நகரில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் டங்சிரியும், அவருடன் உயர் அதிகாரிகளும் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி லாரிஜானி உட்பட ராணுவ தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். Source link