IPL 2026 CSK | 3 வருடத்திற்கு முன்பு சஞ்சு சாம்சன் கூறியதை நினைவு கூர்ந்த ருதுராஜ் கெய்க்வாட்/ 3 years ago Sanju asked me Will you be the next Captain? RUTURAJ GAIKWAD reveals

பல வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையின் கீழ் விளையாட உள்ளார். இந்த நிலையில் 3 வருடத்திற்கு முன் சஞ்சு சாம்சன் கூறியதை ருதுராஜ் கெய்க்வாட் நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக கெய்க்வாட் கூறியதாவது:-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சஞ்சு என்னிடம், மாஹி பாய் எப்படி இருக்கிறார்? சி.எஸ்.கே-வின் சூழல் எப்படி இருக்கிறது? நீங்கள்தான் அடுத்த கேப்டனாக இருப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம், கேப்டன் பதவி பற்றி எனக்குக் கவலையில்லை. இங்கு விளையாடுவதையும், இங்கிருக்கும் கலாச்சாரம் மற்றும் சூழலையும் மட்டுமே நான் நேசிக்கிறேன் என்று பதிலளித்தேன்.

சொல்லப்போனால், சஞ்சு என்னிடம் “நான் அங்கு வந்ததும், உடனே கேப்டனாக வேண்டும் என்று விரும்பும் ஒரு சூழலுக்குள் நான் வர விரும்பவில்லை. நான் உங்கள் தலைமையில் விளையாடவே விரும்புகிறேன். இது உங்கள் அணி. அங்கு ஒரு சாதாரண வீரராகவே இருப்பதிலும் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், எப்போது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், நான் நிச்சயமாக அங்கு வர விரும்புவேன்” என்றார்.

இவ்வாறு கெய்க்வாட் தெரிவித்தார்.

Source link