ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வென்யூ மாடலின் விலையை மாற்றியமைத்துள்ளது. இந்த விலை மாற்றம் வென்யூ காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். விலை உயர்வு ரூ. 5,200-இல் தொடங்கி அதிகபட்சம் ரூ. 20,000 வரை மாறியுள்ளது. இது காரின் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாறுபடும்.
விலை உயர்வை தொடர்ந்து வென்யூ HX5 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் விலை ரூ. 20,000 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த வேரியண்ட் விலை ரூ. 9.55 லட்சம் என மாறியுள்ளது.
இதைத் தொடர்ந்து HX6 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் HX6 1.0 டர்போ பெட்ரோல் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களின் விலை ரூ. 9,000 அதிகரித்துள்ளது.
