கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், நீதித்துறை ஆய்வுக்குபின் வெளியிடப்பட்ட வாக்காளர் துணை பட்டியலில் கொல்கட்டா

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், நீதித்துறை ஆய்வுக்குபின் வெளியிடப்பட்ட வாக்காளர் துணை பட்டியலில் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும் மேற்கு வங்க வக்ப் வாரியத்தின் தலைவருமான ஷாஹிதுல்லா முன்ஷி பெயர் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக ஏப்., 23 மற்றும் 29ல் தேர்தல் நடக்கிறது.

எதிர்ப்பு

முதற்கட்டத்தில் 152 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி, கடந்த ஆண்டு நவம்பரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி துவங்கியது. கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், 63.66 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு, ஆளும் திரிணமுல் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தவிர, 60.66 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டப்பட்டது. வாக்காளர்களாகப் பதிவுபெறுவதற்கான இவர்களின் தகுதி, நீதித்துறை அதிகாரிகளின் ஆய்வு மூலம் தற்போது தீர்மானிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆய்வில் உள்ள வாக்காளர்களின் முதல் துணைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும், மேற்கு வங்க வக்பு வாரியத்தின் தலைவருமான ஷாஹிதுல்லா முன்ஷியின் பெயர், நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஷாஹிதுல்லா முன்ஷி கூறுகையில், “வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்த விசாரணைக்கு நேரில் ஆஜரானேன். இதற்காக, என் பாஸ்போர்ட் சமர்ப்பித்தேன். ஆதார் மற்றும் பான் அட்டைகளை வழங்க முன் வந்தேன்.

முடிவு

”ஆனால், அதற்குரிய எந்த ஒப்புகைச் சீட்டும் எனக்கு வழங்கவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில், என் பெயர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. என் மனைவி மற்றும் மகனின் பெயர்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன.

” இது மிகவும் அவமானகரமானது; துன் புறுத்தலுக்கு சமமானது. எந்த அடிப்படையில் என் பெயர் நீக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மேல் முறையீட்டு தீர்ப்பாயத் தை அணுக முடிவு செய்துள்ளேன்,” என்றார்.

Source link