திருவனந்தபுரம்: கேரளாவில் கூட்டுறவு சங்கங்களுக்கு சாப்ட்வேர் கொள்முதல் செய்வதில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு, 700 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டினார்.
கையெழுத்தானது
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு ஏப்., 9ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மா நிலத்தில், 4,415 தொடக்க கூட்டுறவு வங்கிக்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கொள்முதல் செய்வதற்காக 206 கோடி ரூபாய்க்கு, ‘டாடா கன்சல்டன்சி’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் அந் த நிறுவனத்தை பங்கேற்க விடாமல் தடுக்கும் வகையில் புதிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டு, அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. புதிய நிபந்தனைகளின் படி கண்ணுாரை சேர்ந்த இரு நிறுவனங்கள் மட்டுமே டெண்டர் பெற தகுதி பெற்றன. அவை இரண்டும் மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள்.
நஷ்டம்
அவற்றில் ஒன்றான தினேஷ் பீடி கூட்டுறவு சங்கத்துக்கு சாப்ட்வேர் பணியில் முன் அனுபவம் இல்லாத நிலையில், அந்த நிறுவனம் 58 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரியிருந்தது. அந்த நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை அரசு வழங்க வாய்ப்புள்ளது.
மொத்தம், 4,400 கூட்டுறவு சங்கங்களுக்கு சாப்ட்வேர் வழங்குவதற்கு 915 கோடி ரூபாய் செலவாகும். அதன்படி டாடா நிறுவனம் கோரிய டெண்டர் தொகை 206 கோடி ரூபாய். அந்த ஒப்பந்தத்தை தினேஷ் நிறுவனத்துக்கு வழங்குவதால் அரசுக்கு 700 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்.
அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வ ழங்க தேர்தல் கமிஷன் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது பினராயி அரசு. இதன் மூலம் 700 கோடி ரூபாய் மோசடிக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
