ஒருவரை கட்டாயப்படுத்தியோ, சூழ்ச்சி செய்தோ மதமாற்றம் செய்வது குற்றம். இது நம் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இதற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும்.
சனாதன தர்மத்தின் கீழ் கலாசாரம் மற்றும் மரபுகளில் வேரூன்றிய அடையாளத்தை கொண்ட பழங்குடியின சமூகங்கள், பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற பொருளாதார சலுகைகள்; மூடநம்பிக்கை, எழுத்தறிவின்மை, வறுமையை சுரண்டுதல், மோசடி திருமணங்கள் போன்ற பல்வேறு வழிகளில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றன.
இதுபோன்ற கட்டாய மத மாற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்களை விதிக்க வேண்டும்.
சுமர் சிங் சோலங்கி
ராஜ்யசபா எம்.பி., – பா.ஜ.,
