வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தாலும், மறுபுறம் ஆயிரக்கணக்கான வீரர்களை ஈரானுக்கு அனுப்பி வருதவதால், தரைவழி தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இத்திட்டத்தை அறிந்த ஈரான், கார்க் தீவை ஒரு கோட்டையாக மாற்றியுள்ளது-. இதன்படி, தீவை சுற்றிலும் கண்ணி வெடிகளை புதைத்துள்ளது. கூடுதல் ராணுவ வீரர்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் குவிக்கப்பட்டுள்ளன. யாராவது எல்லை மீறினால், அந்த பிராந்திய நாட்டின் உட்கட்டமைப்புகள் மீது இடைவிடாத தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் திட்டம்!

அமெரிக்க அதிகாரிகளுடனான உரையாடல்களின் அடிப்படையில், ‘ஆக்சியோஸ்’ அறிக்கையின்படி, நான்கு சாத்தியமான போர் சூழல்கள் கணிக்கப்பட்டுள்ளன.

• ஈரானின் பொருளாதார வாழ்வாதாரமான கார்க் தீவை ஆக்கிரமித்து அதை கைப்பற்றுவது

• ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான கட்டுப்பாட்டை தீர்மானிக்கும் லாரக் தீவை கைப்பற்றுவது

• ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் உள்ள அபு மூசா மற்றும் அதன் அருகே உள்ள இரண்டு சிறிய தீவுகளை கைப்பற்றுவது

• ஈரானின் அணுசக்தி நிலையங்களில் உள்ள அணு பொருட்களை பாதுகாக்க ஈரானுக்குள் ஊடுருவுவது.

Source link