ஹைதராபாத், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் மகள் கவிதா, புதிய கட்சியை ஏப்., 25ம் தேதி துவக்குகிறார்.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவ். இவரது மகள் கவிதா. தற்போது தெலுங்கானா ஜாக்ருதி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இவர் நிஜாமாபாதில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
ஏப்ரல் 25ல் புதிய கட்சி துவங்குகிறேன். இதற்கான நிகழ்வு ஹைதராபாதின் புறநகர் பகுதியான முனீராபாதில் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
அப்போது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுகம் செய்யப்படும்.
விவசாயிகள் பிரச்னைகளை பெரிய கட்சிகள் புறக்கணிக்கின்றன. அதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
