ரூபாய் மதிப்பு சரிவு 94.85 ஆக குறைந்தது

மும்பை, இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 94.85 ரூபாயாக குறைந்து, இதுவரை இல்லாத சரிவை சந்தித்தது.

மேற்காசிய போர் நிறுத்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அதிகரித்த கச்சா எண்ணெய் விலையாலும், டாலர் வெகுவாக வலுவடைந்ததாலும், ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்தது.

உள்நாட்டு பங்கு சந்தையின் கடுமையான வீழ்ச்சி மற்றும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடுகளை தொடர்ந்து வெளியேற்றியது ஆகியவை, ரூபாயின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தின என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அன்னிய செலாவணி சந்தையில் ரூபாய் நேற்று, 94.18-ல் துவங்கி 94.50 என்ற முந்தைய அதிகபட்சத்தை கடந்து, 94.85 வரை சரிந்தது. இது, முந்தைய புதன் கிழமை முடிவுடன் ஒப்பிடுகையில், 89 பைசா சரிவு.

போர் பதற்றம் தணியும் வரை, ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தம் தொடரும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Source link