தமிழகத்தில், ஆறு முறை ஆட்சியில் இருந்த தி.மு.க., ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதிகளில் ஒன்று, கோவில்பட்டி. இந்த

தமிழகத்தில், ஆறு முறை ஆட்சியில் இருந்த தி.மு.க., ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதிகளில் ஒன்று, கோவில்பட்டி.

இந்த தொகுதியில், தி.மு.க., நேரடியாக நான்கு முறையும், சில தேர்தல்களில் அதன் கூட்டணி கட்சிகளும் களம் இறங்கின. இதில், தி.மு.க., ஒருமுறை கூட வெற்றி பெற்றது இல்லை.

கடந்த, 1952 முதல் நடந்த 16 தேர்தல்களில், மூன்று முறை காங்கிரஸ் ஒரு முறை சுயேச்சை; ஏழு முறை இ.கம்யூ.,; ஐந்து முறை அ.தி.மு.க., என வெற்றி பெற்றுள்ளன. 2006 முதல் 2021 வரை தொடர்ச்சியாக நான்கு முறை அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதி, இது. கடந்த 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றி பெற்றார்.

கடந்த 2021 தேர்தலில், அ.ம.மு.க, பொதுச்செயலர் தினகரன், இரண்டாம் இடத்தை பிடித்தார். தி.மு.க., கூட்டணியில், மா.கம்யூ., வேட்பாளர் சீனிவாசன் மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த முறை தி.மு.க., நேரடியாக களமிறங்கி, வரலாற்று கறையை போக்க முயற்சித்து வருகிறது.

Source link